பீஜிங்:
மாமிச பட்சிகளான சீனர்கள் அனைத்து வகையான உணவுகளையும் உண்ணுவதில் ஆர்வம் மிக்கவர்கள். கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி, ஆடு, மாடு, நாய், நரி போன்ற விலங்குகள் மட்டுமன்றி பாம்பு, பூச்சி, தேள், பூரான், புழு வண்டுகள் என அனைத்தையும் ருசிப்பதில் வல்லவர்கள். பல கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி புழு பூச்சிகளை உயிருடனும் தின்பது அவர்களின் வழக்கம்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், சீனாவை சேர்ந்த இணையதள செயற்பாட்டாளரான இளம்பெண் ஒருவர் கடல்வாழ் உயிரினமான ஆக்டொபஸ்ஸை உயிருடன் சாப்பிடப்போவதாக அறிவித்து அதை இணையதளம் மூலம் லைவாக ஒளிபரப்பினார்.
ஆக்டோபஸை எடுத்து அப்படியே வாயில் வைத்து கடித்து விழுங்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த ஆக்டோபஸ் அவரது பிடிக்குள் சிக்காமல் தமது 8 கால்களையும் பரப்பி, அந்த இளம்பெண்ணின் முகத்தில் தாக்கத் தொடங்கியது.
இதனால் வலியால் துடிந்த இளம்பெண், தனது வாய்க்குள் வைத்த ஆக்டோபஸை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார். அதற்குள் அந்த ஆக்டோபஸ் அந்த பெண்னின் உதடு மட்டும் கண்ணத்தை கவ்வி இழுக்கிறது. இதனால் வலியால் துடித்த அந்த பெண் ஆக்டோபஸின் கால்களை ஓவ்வொன்றாக பிடுங்கி அதன் பிடியில் இருந்து தப்பிக்கின்றார்.
அப்போது, அந்த ஆக்டோபஸ் அந்த இளம்பெண்ணின் அழகான உதடுகளை கடித்து ரத்தகளறி யாக்கியது மட்டுமல்லாமல், அவரது கன்னத்திலும் கடித்து தனது அடையாளத்தை பதிவு செய்துள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…
இளம்பெண்ணின் கன்னத்தில் ஆக்டோபஸ் முத்தமிடும் காட்சி.. இதோ உங்களுக்காக…
[youtube-feed feed=1]