ண்டிகர்

வாக்கு சேகரிக்க வந்த நடிகர் அனுபம் கேர் இடம் ஒரு கடைக்காரர் 2014 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் பற்றி கேள்விகள் எழுப்பி உள்ளார்.

பாலிவுட் மூத்த நடிகரான அனுபம் கேர் பாஜகவில் உள்ளார்.   இவரது மனைவியும் புகழ்பெற்ற குணசித்திர நடிகையுமான கிரண் கேர் தற்போது சண்டிகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.    சண்டிகர் நகரில் தனது மனைவிக்காக வீடு வீடாக சென்று அனுபம் கேர் வாக்கு சேகரித்து வருகிறார்.

அனுபம் கேர் புகழ்பெற்ற நடிகர் என்பதால் அவரைக் காண பெரும் கூட்டம் கூடி வருகிறது.   சென்ற வாரம் நடந்த ஒரு கூட்டத்தில் அவரிடம் ஒருவர் கிரண் கேர் அரசியலை விட நடிப்பில் திறமை பெற்றுள்ளது குறித்து கருத்து கேட்கப்பட்டது.   அதற்கு என்ன பதில் அளிப்பது என தெரியாத அனுபம் கேர் ’பாரத் மாதாகி ஜெய்’ என சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

https://twitter.com/scribe_prashant/status/1126011899882029057

 

நேற்று அவர் ஒரு கடைக்கு சென்று தனது மனைவிக்காக வாக்கு சேகரித்துள்ளார்.   அப்போது அந்த கடைக்காரர், “ஐய, ஒரு சிறு கேள்வி உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.  நீங்கள் கடந்த 2014 ஆம் வருட தேர்தலின் போது நிறைய வாக்குறுதிகள் அளித்தீர்கள்.   அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதைக் கேட்டதும் அனுபம் கேர் முகம் சிவந்துள்ளது.   பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறி உள்ளார்.  இந்த நிகழ்வு வீடியோ பதிவாகி சமூக வலை தளங்களில் பதியப்பட்டது.   அந்த பதிவை பலரும் பகிரவே அது வைரலாகி வருகிறது.