புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் இயங்காததால், அதனுடைய வழித்தடங்களை பிற நிறுவன விமானங்களுக்கு ஒதுக்குவது குறித்த விரிவான அறிக்கையைக் கேட்டிருக்கிறார் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு.
விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில், போக்குவரத்து கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில், ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் வழித்தடம், வேறு நிறுவன விமானங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாய் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் வழித்தடங்கள் வேறு எந்த விமானங்களுக்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த ஒரு விரிவான அறிக்கையை, விமானப் போக்குவரத்து துறை செயலாளர் பிரதீப் சிங் கரோலாவிடம் கேட்டிருக்கிறார் அமைச்சர் சுரேஷ் பிரபு.
இந்த விரிவான அறிக்கை, மே மாதம் 11ம் தேதி சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஒதுக்கீடு என்பது தற்காலிக ஏற்பாடு மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.