விசாகப்பட்டினம்:
ஐபிஎல் தொடரின் 2வது தகுதிச்சுற்று ஆட்டம் நேற்று இரவு விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்று அடுத்துச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் குவாலிபயர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் தகுதிச்சுற்று போட்டி சென்னைக்கும், மும்பைக்கும் நடைபெற்ற நிலையில், மும்பை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2வது தகுதிச்சுற்று போட்டி நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி மைதானத்தில் சன் ரைசர்ஸ் அணிக்கும், டில்லி அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில், 2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்று அடுத்தச்சுற்றுக்கு முன்னேறியது.
நாளை நடைபெற உள்ள 3வது தகுதிச்சுற்றுப் போட்டியில் சிஎஸ்கே அணியும், டெல்லி கேப்பிடல் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.
நேற்றைய போட்டியில் டெல்லி அணியில் காலின் இங்ராம் நீக்கப்பட்டு காலின் முன்ரோ சேர்க்கப்பட்டார். அதுபோல ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதிலாக தீபக் ஹூடா இடம் பிடித்தார்.
ஆட்டத்தின்போது ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் ஐதராபாத் அணி மட்டையுடன் களம் இறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
முதல் ஓவரிலேயே பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி அணி பவுலர் டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் பந்திலேயே விருத்திமான் சஹா எல்பிடபிள்யு என நினைத்து ‘அவுட்’ என்றார் நடுவர். ஆனால், இது சலசலப்பபை ஏற்படுத்தி யது. நடுவரின் முடிவை எதிர்த்து விருத்திமான் சஹா அப்பீல் செய்ய, நடுவரின் முடிவு தவறு என்பது நிரூபண மானதால், கண்டத்தில் இருந்து தப்பினார் சஹா. தொடர்ந்து மார்ட்டின் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். இஷாந்த் ஷர்மாவின் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் அடித்து விளாசினார். 3.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 31 ரன்னாக இருந்த போது விருத்திமான் சஹாஇஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே களம் இறங்கினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து மளமளவென ஸ்கோர் உயர்ந்து வந்த நிலையில், 6.3 ஓவர்களில் 56 ரன்னாக உயர்ந்த போது மார்ட்டின் கப்தில் அமித் மிஸ்ரா பந்து வீச்சில் கீமோ பாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர், 19 பந்தில் 1 பவுண்டரி, 4 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கீமோ பால் பந்து வீச்சில் ரூதர்போர்டிடம் கேட்ச் கொடுத்தர். இதையடுத்து களத்தில் புகுந்த தமிழக வீரர் விஜய் சங்கர், கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்து தூள் கிளப்பினர். இந்த நிலையில், ஐதராபாத் அணி 100 ரன்களை கடந்தது. இதற்கு 14.2 ஓவர்கள் தேவைப்பட்டிருந்தது. இந்த நிலையில், கேப்டன் வில்லியம்ஸ் சொதப்பத் தொடங்கினார். அவர் 27 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்தின் பந்தில் போல்டாகி வெளியேறினார். அவரை பின்தொடர்ந்து 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விஜய் சங்கரும் அக்ஷர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேற ஆட்டம் தடுமாறியது. தொடர்ந்த களம்புகுந்த முகமது நபி 20 ரன்னுடனும், தீபக் ஹூடா 4 ரன்னுடனும், ரஷித் கான் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. புவனேஷ்வர்குமார் ரன் எதுவும் எடுக்காமலும், பாசில் தம்பி 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். டெல்லி அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி மட்டையுடன் மைதானத்திற் குள் புகுந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
அணி ஸ்கோர் 7.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 66 ரன்னாக இருந்த போது ஷிகர் தவான் தீபக் ஹூடா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார். தவான் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். ஆனால், அவர் 8 ரன்னில் வெளியேற ஆட்டத்தில் மந்தமான நிலை உருவானது.
இதையடுத்து ரிஷாப் பான்ட் களமிறங்கினார். இவர் பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார். இந்த நிலையில், பிரித்வி ஷா 38 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து து ரிஷாப் பான்ட்டுக்கு காலின் முன்ரோ கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 14 ரன்னில் வெளியேற, தொடர்ந்து இறங்கிய அக்ஷர் பட்டேல் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வழியே வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டில்லி அணி ரசிகர்கள் சோகமயமாயினர். அப்போது களமிறங்கிய ரூதர்போர்டும் 89 ரஙைன எடுத்த நிலையில் வெளியேறரிஷாப் பான்ட் மட்டுமே நிலைத்து நின்று அதிரடியாக ஆடி அணியை ஸ்கோரை உயர்த்தி வந்தார். சாதகமாக வந்த பந்துகளை சிக்சருக்கு தூக்கியடித்து டெல்லி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், 18.5 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 158 ரன்னாக இருந்த போது ரிஷாப் பான்ட் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ரிஷாப் பான்ட், 21 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர் உடன் 49 ரன்கள் எடுத்திருந்தார்.
கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் மிகுந்த பரபரப்பு நிலவியது. கடைசி ஓவரின் 4-வது பந்தில் அமித் மிஸ்ரா சர்ச்சைக்குரிய முறையில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் ரன்-அவுட் ஆனதால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இருந்தாலும், 5வது பந்தை கீமோ பால் பவுண்டரிக்கு விரட்ட அணியின் வெற்றி உறுதியானது. இதன் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து அடுத்தச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெற உள்ள 3வது சுற்று ஆட்டத்தில் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும்.
ஆட்ட நாயகனாக ரிஷாப் பன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.