டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திடீரென சந்தித்து பேசினார். இந்த  திடீர் சந்திப்பு டில்லியில் உள்ள ராகுலுன் இல்லத்தில் நடைபெற்றது.

பாஜகவுக்கு எதிரான அணியில் தீவிரமாக பணியாற்றி வரும் ஆந்திர முதல்வரும் – தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுலை  அவரது இல்லத்தில் இன்று  காலை சந்தித்துப் பேசினார்.

தற்போதைய அரசியல் நிலவரம், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆட்சி அமைப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமீப நாட்களாக 3வது அணி அமைப்பது குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசி ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி வரும், சந்திரபாபு நாயுடுவின் ராகுலுடனான சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.