வாரணாசி: தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, மாநில தலைநகர் காந்திநகரின் ஒரு முக்கியமான பகுதியில், நரேந்திர மோடி தனக்காக இடம் ஒதுக்கிக்கொண்ட விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது.

வாரணாசி தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் அவரின் சமீபத்திய பேச்சு ஆகியவற்றிலிருந்து இந்த உண்மை வெளிவந்துள்ளது.

குஜராத் தலைநகர் காந்தி நகரின் ஒரு முக்கியமான இடத்தில், மிகக்குறைந்த விலையில் மோடி தனக்கு இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளார். அதன் இன்றைய மதிப்பு ரூ.1 கோடி.

ஆனால், உச்சநீதிமன்றத்தில் கடந்த 2007ம் ஆண்டு, குஜராத் அரசிற்கான சட்ட ஆலோசகராக ஆஜரான பாரதீய ஜனதா தலைவர் மீனாக்ஷி லெகி, கடந்த 2000ம் ஆண்டு முதல், குஜராத் மாநிலத்தில் புதிதாக எந்தவொரு இடஒதுக்கீட்டு செயல்முறையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

ஆனால், முதலமைச்சரான சிறிதுகாலத்திலேயே, கடந்த 2001ம் ஆண்டு, இடம் ஒதுக்கீட்டுப் பெறுவதற்கான தகுதி வாய்ந்த நபராக மாறியிருக்கிறார் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.