லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்த மிக முக்கிய நகரான லாஸ்ஏஞ்சலிஸ் நகரின் 4 மைல் நீளமுள்ள ஒரு நீண்ட சாலைக்கு, முன்னாள் அதிபர் ஒபாமாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஒபாமாதான் நாட்டின் முதல் ஆஃப்ரிக்க கலப்பின அதிபர். எனவே, அவரின் நினைவாக இப்பெயர் சூட்டப்படுகிறது. முன்பு ரோடியோ சாலை(Rodeo Road) என்றழைக்கப்பட்ட இந்த நீளமான சாலை, இனிமேல், ஒபாமா அகலப்பாதை(Obama Boulevard) என அழைக்கப்படும்.
இந்த சாலையில் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு அமெரிக்க குழந்தையும், ‘எந்த இலக்கும் அடையப்பட முடியாததல்ல’ என்ற மந்திரத்தை இதன்மூலம் கற்றுக்கொள்ளும்.
இந்த சாலையில் அமைந்த ரன்சோ சைனகா பூங்காவில்தான், கடந்த 2007ம் ஆண்டு, பிப்ரவரி 20ம் தேதி தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தை ஒபாமா நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் இந்த பெயர் மாற்றத்திற்கான இறுதி ஒப்புதல் கிடைத்தது. அதாவது, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பத்தாண்டுகள் நிறைவில் இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர்.