சென்னை:

லங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற தேவாலய தாக்குதலுக்கு மூளை யாகச் செயல்பட்டவனின் செல்போன் அழைப்புகள் தொடர்பான ஆவணங்களில்,  தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த சிலரது எண்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அதே வேளையில் வெடிகுண்டு வெடிக்க செய்த பயங்கரவாதி சென்னை வந்து சென்றதாகவும், சென்னையில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கும் மண்ணடிக்கு வந்ததாக உளவுத்துறை  தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் பயங்கர குண்டு வெடிப்பை செய்ததது, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த ஜஹரன் ஹாசிம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இவன்தான்  இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவனது செல்போன் அழைப்பு தரவுகளை சோதித்த போது அதில், தமிழ்நாடு மற்றும் கேரளத்தை சேர்ந்த 12க்கும் மேற்பட்டோரின் எண்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவன் தமிழகத்தில் மண்ணடி பகுதிக்கு வந்துசென்றதாகவும் கூறப்படுகிறது

ஹசன் என்ற இலங்கையை சேர்ந்த இளைஞர் கடந்த 14ம் தேதி சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது.  2 நாட்கள் சென்னையில் முகாமிட்டுள்ள ஹசன்,  சென்னை மண்ணடி பகுதிக்கு சென்று பல்வேறு நபர்களை சந்தித்துள்ளார்.

ஹாசீம் என்ற பயங்கரவாதிக்கு இந்த ஹசன் மிகவும் நெருக்கமான நண்பர் என்பது தெரிய வந்துள்ளது.  இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்தான் சரான் ஹாசிம். இவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர். இவருக்கு நெருக்கமான நபர்களை உளவுத்துறை தேடி வருகிறது. ஏன் முக்கியம் இந்த நிலையில் ஹசன் சென்னை வந்தது ஏன் என்று விசாரணை நடந்து வருகிறது. சென்னையில் இவர் யாரை எல்லாம் சந்தித்தார் என்று ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது. தகவலின் அடிப்படையில், அந்த நபர்களை தேடி வருவதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இலங்கை தாக்குதலுக்கு தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.