மும்பை:
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் பெண்கள் டி20 சேலஞ்ச் போட்டிகளும் நடைபெற உள்ளதால், ஆட்டத்தின் நேரத்தை பிசிசிஐ மாற்றி உள்ளது. இரு போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் நிலையில், பெண்கள் டி20 சேலஞ்ச் போட்டி ஆட்டம் மே 8ந்தேதி மாலை 3.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐபிஎல் போட்டியின் குவாலிஃபையர் 1 சென்னையில் மே 7ம் தேதியும்,
எலிமினேட்டர் சுற்று மே 8ம் தேதி,
குவாலிஃபையர் 2 மே 10ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல்லின் இறுதி போட்டி மே 12ம் தேதி ஹைதராபாத்தில் நடைப்பெறுகிறது.
பொதுவாக, ஐபிஎல் போட்டிகள் 7.30 மணிக்கு டாஸ் போட்டு, 8 மணிக்கு போட்டி தொடங்கும். ப்ளேஆஃப் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி 7.30 மணிக்கே தொடங்கும் என பிசிசிஐ ஆலோசனை குழு முடிவெடுத்துள்ளது.
அதே வேளையில் மே 6ம் தேதி துவங்கும் பெண்கள் டி20 சேலஞ்ச் போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.
இதன் காரணமாக ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி நடைபெறும் மே 8ம் தேதி மட்டும் பெண்கள் போட்டி நேரம் மாலை 3.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பெண்கள் டி20 போட்டிகள் ஜெய்ப்பூரில் இருக்கும் சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
சூப்பர் நோவாஸ், ட்ரையல் ப்ளாஸர்ஸ் மற்றும் வெலாசிட்டி என பெண்கள் டி20 சேலஞ்ச் அணிகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
போட்டி அட்டவணை:
மே 6: சூப்பர் நோவாஸ் vs ட்ரையல் ப்ளாசர்ஸ்
மே 8: ட்ரையல் ப்ளாசர்ஸ் vs வெலாசிட்டி
மே 9: சூப்பர் நோவாஸ் vs வெலாசிட்டி
இதில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் மே 11 நடக்கும் இறுதிப்போட்டியில் ஆடும் என்றும் கூறப்பட்டுள்ளது.