கொல்கத்தா

தாம் அவுட் ஆனதற்காக ஸ்டம்பை தட்டி விட்ட ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று கொல்கத்தாவில் ஐபிஎல் 2019 இன் லீக் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்தது.   முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 2 விக்கட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது.   அடுத்து விளையாடிய மும்பை அணி 7 விக்கட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த போட்டியின் ரோகித் சர்மா 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குர்னி வீசிய பந்தில் எல் பி டபிள்யூ அவுட் ஆனார்.   இந்த அறிவிப்புக்கு ரோகித் மேல் முறையீடு செய்தார்.    அது டி ஆர் எஸ் முறையில் அவுட் என அறிவிக்கப் பட்டது.   ரோகித் சர்மா இதனால் மிகவும் எரிச்சல் அடைந்தார்.

களத்தை விட்டு வெளியேறும் போது நடுவரின் அருகில் இருந்த ஸ்டம்பை தனது பேட்டினால் தட்டி விட்டு சென்றார்.    அவர் இவ்வாறு செய்தது ஐபிஎல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால்  விசாரணை நடந்தது.   அவருக்கு இதற்காக அவர் ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.