பாலசோர், ஒரிசா
பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் தாம் தேர்தலில் வென்று முதல்வராவோம் என்னும் நம்பிக்கையை வெளிபடுத்தி உள்ளார்.
ஒரிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் வாக்குப் பதிவுகள் நான்கு கட்டமாக நடைபெற்று வருகின்றன. இதில் அடுத்த கட்ட வாக்குப் பதிவுகள் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று இம்மாநிலத்தில் நடைபெற உள்ளன. அதை ஒட்டி கடுமையாக பிரசாரம் நடந்து வருகிறது.
தற்போது ஆட்சியில் உள்ள பிஜு ஜனதா தள தலைவரும் ஒரிசாவின் முதல்வருமான நவின் பட்நாயக்கை ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். நேற்று முன் தினம் பாலசோர் பகுதியில் பிரதாரம் செய்த மோடி, “நவின் பட்நாயக் இந்த சட்டப்பேரவை தேர்தலில் தோற்று விட்டுக்கு சென்ற பிறகு தான் மீண்டும் ஒரிசா வருவேன்.” என பேசினார்.
நேற்று அதே பாலசோரில் நடந்த பிஜு ஜனதா தள தேர்தல் பேரணியில் பிஜு பட்நாயக். “கடந்த சில வருடங்களாக ஒரிசாவில் கடும் வறட்சியும் வெள்ளமும் ஏற்பட்ட போது பிரதமர் மோடி அதை பார்வையிட ஒரிசாவுக்கு வரவே இல்லை. அதற்கு அவருக்கு நேரமும் இல்லை. தற்போது தேர்தலுக்காக ஒரிசாவுக்கு வந்து முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
நேற்று என்னை வீட்டுக்கு அனுப்பிய பிறகு மீண்டும் ஒரிசா வருவதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். ஏற்கனவே நடந்த மூன்று கட்ட வாக்குப்பதிவுகளில் பிஜு ஜனதா தளத்தின் வெற்றி உறுதி ஆகி விட்டது. வரும் மே மாதம் 23 ஆம் தேதி அன்று அந்த முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் பிறகு நான் முதல்வராக பதவி ஏற்கும் விழாவுக்கு மோடி அவசியம் வரவேண்டும்” என பேசி உள்ளார்.