டில்லி
ஒவ்வொரு சேனலுக்கும் தனிக்கட்டணம் என்பதை மீறி முழு சேனல்களையும் பெற வற்புறுத்தும் டிடிஎச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என டிராய் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் ஒட்டு மொத்தமாக அனைத்து சேனல்களையும் பெறுவதால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது எனக் கூறி டிராய் விரும்பும் சேனல்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி மொத்தமாக வழங்கப்படும் அனைத்து சேனல்களில் நாம் விரும்பும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் அளித்தால் போதுமானதாகம்.
அதே நேரத்தில் இந்த புதிய விதிகளின்படி வாடிக்கையாள்ர்கள் தங்களுக்கு பிடித்த சேனல்கள் மற்றும் கட்டணங்களை தேர்வு செய்வதில் குழப்பம் அடைந்துள்ளனர். மொத்தம் 100 சேனல்களை தேர்ந்தெடுக்கும் போது பல நிறுவனங்கள் இன்னும் தனித் தனியே கட்டணம் அறிவிக்காமல் உள்ளன. இது குறித்து பலர் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் டிராய் தலைவர் ஷர்மா, “நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குழப்பம் பற்றிய புகார்களை பெற்றுள்ளோம். பல சேனல்கள் இன்னும் தனித்தனியே கட்டணம் குறித்து தெரிவிக்கவில்லை. அத்துடன் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் படி எந்த ஒரு மென்பொருளையும் அமைக்கவில்லை. இதனால் இந்த திட்டத்தின் நோக்கமே பாழாகிறது.
இந்த திட்டத்தின் நோக்கமே ஒரு சேனலுக்காக குழுமத்தின் அனைத்து சேனல்கலுக்கான கட்டணம் செலுத்த வேண்டாம் என்பதே ஆகும். எனவே தனித்தனியே கட்டணங்களை அறிவித்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வசதியான மென்பொருளை அமைக்க வேண்டும். அவ்வாறு நடக்காத டிடிச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.