காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே நடக்கும் சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே . இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், ஒருவர் மீது ஒருவர் கூறும் புகாரால், இவர்களது குடும்ப பிரச்சினையை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பாலாஜி, தனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும், என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாரம் ஒரு முறை பாலாஜி அவரது மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும், என தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து பாலாஜி கூறுகையில், “என் பலமே என் மகள் தான். அவரை வைத்து என்னை வீழ்த்த நித்யா நினைக்கிறார்., என் மகளின் படிப்பு செலவை நானே பார்த்துக் கொள்கிறேன். நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் எனக்கு நியாயம் கிடைத்துள்ளது. இதற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]