கொழும்பு:

லங்கை மட்டக்களப்பு வீதிகளில் ஆங்காங்கே குழந்தைகள் மரண அறிவிப்பு பேனர்கள் காணப்படு கின்றன. இது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளை யும், உறவினர்களையும் குண்டுவெடிப்பில் பறிகொடுத்த மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கண்ணீரில் மிதக்கின்றனர்.

டந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளின்போது,  இலங்கை கிறிஸ்தவ கோவில்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில்   321 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித் துள்ள  நிலையில், 500 பேர் வரையிலும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இறந்தவர்களில்  45 பேர் சிறுவர் சிறுமியிர்கள் என்று யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் இலங்கையின் கடற்கரை மாவட்டமான மட்டக்களப்பு பகுதியில் வசித்து வரும் தமிழ் மக்களும்  அதிகஅளவில்  பலியாகி உள்ளனர்.  அவர்களின் ஏராளமான குழந்தை களும் குண்டு வெடிப்பில் சிக்கி சின்னபின்னமாகின.  இது பெரும் சோகத்தை  ஏற்படுத்திய நிலையில், மட்டக்களப்பு மாகாணம் முழுவதுமே கண்ணீரில் மிதக்கிறது.

குண்டுவெடிப்பில் இறந்த அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகளின் அழகான உருவப்படத்துடன் கூடிய மரண அறிவிப்பு பேனர்கள் ஆங்காங்கே தெருக்களில் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு உள்ளது.

இதை காண்போரின் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது.