டில்லி

வகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் நஜீப் அகமது காணாமல் போன வழக்கு விசாரணை ஆவணங்களை அவருடைய தாய்க்கு அளிக்க சிபிஐக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் நஜீப் அகமது . கடந்த 2016 ஆம் வருடம் நஜீப் மற்றும் அவர் நண்பர்களுக்கும் ஏ பி வி பி அமைப்பை சேர்ந்த சில மாணவர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு நஜீப் அகமது காணாமல் போய் விட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என அவருடைய தாயார் மனு அளித்தார்.

அந்த வழக்கு 2017 ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இரு வருடங்களுக்கு பிறகு சிபிஐ அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி இந்த வழக்கை முடித்துக் கொள்ள டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது. அதை ஏற்றுக் கொண்ட டில்லி யர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து நஜீப் அகமது வின் தாய் மேல் முறையீடு செய்தார். இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது டில்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை மற்றும் வழக்கை முடிக்க கோரிக்கை விடுத்த மனு குறித்த அனைத்து ஆவணங்களையும் நஜீப் அகமதுவின் தாய்க்கு இரு வாரத்துக்குள் அளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.