இலங்கையில் வெளிநாட்டவர்களை குறிவைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 215 பேர் உடல்சிதறி பலியானார்கள், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் சீனா, அமெரிக்கா, மொராக்கா, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் :-
ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என பதிவிட்டுள்ளார்.