புதுடெல்லி: டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டாலும், அதன் உரிமையாளரான சீனாவின் புகழ்பெற்ற பைட்டான்ஸ் நிறுவனம், இந்தியாவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
பல முறைகேடுகளுக்கு காரணமாகிறது என்ற புகார்களை முன்வைத்து, டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது.
பைட்டான்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்படுவதாவது; கடந்த பல மாதங்களாக, நிறுவனத்தின் உள்ளடக்க வடிவமைப்பு கொள்கையை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சில சம்பவங்களால் நாங்கள் ஏமாற்றமடைந்திருப்பது உண்மைதான் என்றாலும், அவற்றை நாங்கள் நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறோம்.
சிக்கல்களுக்கு சரியான முறையில் தீர்வு காண்போம்.
எங்களுடைய இந்தியப் பயன்பாட்டாளர்கள் விஷயத்தில் நாங்கள் தொடர்ந்து அக்கறை செலுத்துவோம். ஒரு நிறுவனம் என்ற முறையில், அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்கின்றனர்.
மேலும், இந்தியாவில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையையும், இந்த ஆண்டின் இறுதியில் 1000 என்ற அளவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி