ஷாங்காய்: சீனாவில் பரவலாக நிலவும் வறுமையை, வரும் 2020ம் ஆண்டிலேயே ஒழிக்கும் முயற்சிகளில் அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டு வருகிறது.

சீன அரசின் வரையறையின்படி, ஆண்டிற்கு 2800 யுவான்களுக்கு (416 ‍அமெரிக்க டாலர்கள்) குறைவாகவோ அல்லது நாள் ஒன்றுக்கு 1.10 அமெரிக்க டாலருக்கு குறைவாகவோ வருமானம் ஈட்டுவோர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்.

இந்த வரையறையானது, உலக வங்கி நிர்ணியத்துள்ள வறுமைக்கோட்டு வரையறையைவிட குறைவானது. உலக வங்கியினுடைய மதிப்பீட்டின்படி, ஆண்டொன்றுக்கு 700 அமெரிக்க டாலர்களும், நாளொன்றுக்கு 1.90 அமெரிக்க டாலர்களும் வருவாய் ஈட்டுவோரே வறுமைக்கோட்டிற்கு மேலேயுள்ளவர்கள்.

சீன அரசின் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில், கம்யூனிஸ்ட் கட்சியின் 7,75,000 அலுவலர்கள் களமிறக்கிவிடப்பட்டுள்ளனர். அவர்களில் பலர், ஒவ்வொரு வீடாக சென்று, அரசின் சார்பில் என்ன செய்யவேண்டுமென கருத்துக் கேட்கின்றனர். இப்பணியில் தோல்வியடையும் கட்சி அலுவலர்களுக்கு, பதவி உயர்வில் பின்னடைவு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சீன ஆளும் தரப்பின் இந்த முயற்சி தேவையில்லாத ஒன்றென்றும், நடைமுறை உண்மையைக் கண்டுகொள்ளாத நிலை என்றும் எச்சரிக்கின்றனர்.

– மதுரை மாயாண்டி

[youtube-feed feed=1]