பெங்களூரு

ங்கி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையாவின் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் உள்ளது.

மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இன்று மத்திய பெங்களூரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பெங்களூருவில் ஏற்கனவே புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் வீடு மாற்றி அந்த வீட்டில் இல்லாததே காரணம் என சொல்லப்பட்டது.

அத்துடன் பல பிரபலங்களின் பெயர்களும் அவர்கள் அதே ஊரில் வேறு இடங்களுக்கு வசிக்க சென்றதால் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரபல தொழிலதிபரன விஜய் மல்லையா பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் நீக்கப்ப்படாமல் உள்ளது. அவருடைய பெயர் இன்றைய வாக்களிப்பு நடைபெறும் செயிண்ட் ஜான் பள்ளியில் இடம் பெற்றுள்ளது.

விஜய் மல்லையா வீட்டை மட்டும் அல்ல, நாட்டை விட்டே ஓடி உள்ளது அனைவரும் அறிந்த விஷயமாகும். தற்போது அவர் லண்டனில் வசித்து வருவதால் அவரை நாடு கடத்தி கொண்டு வர முயற்சிகள் நடப்பதும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளாக வெளியாகின. ஆயினும் அவர் பெயர் நீக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.