ராய்ப்பூர்: கடந்த டிசம்பரில் நடந்த சத்தீஷ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததையடுத்து, முன்னாள் முதல்வர் ராமன் சிங்கின் மகனுக்கு இந்தமுறை மக்களவை டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதாவில் ஒரு சமயத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் ராமன்சிங். தொடர்ந்து 15 ஆண்டுகாலம் சத்தீஷ்கர் மாநில முதல்வராக இருந்தவர். ஆனால், கடந்த தேர்தலில் காங்கிரசிடம் படுதோல்வியை சந்தித்ததிலிருந்து, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
கடந்த 2014ம் ஆண்டு மக்களவைக்கு தேர்வுசெய்யப்பட்ட ராமன்சிங்கின் மகனுக்கு இத்தேர்தலில் வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும், தேர்தல் பிரச்சாரத்திலும், ராமன்சிங் ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளார்.
அவரை பிரச்சாரத்தில் பிரதானமாகப் பயன்படுத்தினால், அவர் ஆட்சியின் மீதான அதிருப்தி, மீண்டும் மக்களின் நினைவிற்கு வந்து, பெரிய பிரச்சினையாகிவிடும் என பாரதீய ஜனதா தலைமை தயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
– மதுரை மாயாண்டி