டில்லி
முன்னாள் உத்திர பிரதெச முதல்வர் மறைந்த என் டி திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி திடீர் மரணம் அடைந்துள்ளார்.

உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் என் டி திவாரி.
இவரது மகன் ரோகித் சேகர் திவாரி ஆவார்.
இன்ற் மாலை டில்லியில் உள்ள மாக்ஸ் சாகேத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ரோகித் சேகர் திவாரி கொண்டு வரப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மருத்துவர்கள் மரணத்துக்கான காரணத்தை இன்னும் தெரிவிக்கவில்லை.
Patrikai.com official YouTube Channel