நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

 

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இருவரும் நாடு விட்டு நாடு சென்று கொண்டாடுவது வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் அதைவிட்டு வைரல் ஆக்குவது வழக்கம்.

 

இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது ரஜினிக்கு ஜோடியாக ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவன், ரஜினியை சந்தித்துப் பேசிய புகைப்பட்ஙகள் சமீபத்தில் வெளியானது. . ரஜினியை சந்தித்துவிட்டு நேராக இஸ்லாமிய புனித தலமான அஜ்மீர் தர்காவுக்கு விக்னேஷ் சிவன் சென்று வழிபட்டுள்ளார்.

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அம்மா, நயன்தாரா உள்ளிட்டோருடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் . அதில், தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ வாழ்த்துகள். குடும்பம் தான் எல்லாம்’ என்று பதிவிட்டுள்ளார்.