
பிரபல மலையாள நடிகர் சன்னி வெயின் தனது காதலி ரஞ்சனி குஞ்சு என்பவரை நேற்று குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து நண்பர்களும், திரையுலக பிரபலங்களும் பங்கேற்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
நடிகர் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சன்னி வெயின் அறிமுகமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் கலந்துக் கொண்ட இந்த திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன்னி வெயின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel