தற்போது இந்திய வங்கிகள் புதியதாக வழங்கும் வங்கிஅட்டைகளில் கார்ட்லெஸ் (வைபை நுட்பத்தின்) அடையாளம் இருந்தால் அந்த அட்டை மின்னலை தொழில்நுட்பத்தின் வழியாக வயர்லஸ் அட்டையாகவும் பயன்படுத்தலாம். அவற்றினை நீங்கள் இயந்திரத்தில் கொண்டுபோய் இணைத்து பணம் செலுத்தத்தேவையில்லை.
மாறாக ஏடிஎம் இயந்திரத்தின் அருகில் கொண்டுபோய் வைத்தாலே போதும், உங்கள் அட்டை யில் இருந்து உங்கள் விபரங்கள் மின்னலை வழியாக இயந்திரத்தின் அருகாமயில் உள்ள தகவல் தொடர்பு வழியே (NFC) தகவலை அனுப்பிவிடும்
உதாரணத்திற்கு ஒரு பெரிய பல்அங்காடியில் நீங்கள் வாங்கிய பொருளுக்கு 1500 ரூபாய் பணம் செலுத்தவேண்டுமென்றால் உங்களிடம் மின்னலை வழியே இயங்கும் வயர்லெஸ் அட்டை இருந்தால் நீங்கள் பணம் செலுத்துமிடத்தின் அருகே உள்ள இயந்திரத்தில் அருகே இருந்தால் போதும், உங்கள் வங்கிஅட்டை விபரங்கள் மின்னலை வழியே இயந்திரத்துக்கு தகவலை கொண்டுசெல்லும். அதன்பின்னர் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தினை பெற்றுக்கொள்ளும், வயதானவர்களுக்கு இது நல்லமுறை என்றாலும் பாதுகாப்பு கொஞ்சம் சிக்கல்தான்
உங்கள் வங்கியின் டெபிட் கார்டு ( Debit Card), கடனட்டை(Credit Card) போன்றவற்றில் முன்பே சொன்னதுபோல் ஒரு வைபை ( கோபுரப் படம் காட்டப்பெற்றால் அந்த அட்டையை யார் வைத்து இருக்கிறார்களோ அவர்களிடம் இருந்து ரூ.2000 குறைவாக உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும். இங்கே வங்கி அட்டைக்கான பாதுகாப்பு எண்கள் கேட்கப்படாமாட்டாது.
இந்திய ரிசர்வ் வங்கி மின்னலை வழியாக இயங்கும் கார்ட்லெஸ் அட்டைகள் வழியாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2000 ருபாய் மட்டுமே எடுக்கமுடியும். பயனாளரோ அல்லது வங்கியோ இந்தத் தொகையை அதிகப்படுத்தவோ , குறைக்கவோ முடியாது
இந்தத்தொழில்நுட்பம் near-field communication எனப்படும் அருமை தகவல் தொழில்நுட்பம் வழியாக செயல்படுகிறது.
ஒரு நாளைக்கு தொடர்பிலா அட்டை வழியாக 5 பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யமுடியும், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2000 என்றாலும் 5 பரிவர்த்தனைக்கு ரூ.10,000, அதற்கு மேலே போனால் நீங்கள் வழக்கம்போல் பொறியில் வங்கி அட்டையை தேய்துத்தான் பணம் பரிமாற்றம் செய்யமுடியும்.
ஆனால் ஒருவேளை திருடப்பட்டால் உங்கள் கேட்காமலயே பணம் போகவும் வாய்ப்பிருக்கிறது. வங்கியும் பணத்தை மீட்க உதவி செய்யும் என்றாலும் எப்போது வங்கி பணத்தை மீட்க உதவி செய்கிறேன் என்று சொல்கிறதோ அப்போது அந்த அட்டையின் வழியே பணம் திருடப்பட்டுள்ளது என்பதை வங்கியே ஒப்புக்கொண்டது போலாகும்.
இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் மின்னலை வழியே இயங்கும் வங்கி அட்டை தொலைந்துபோனால் இந்த அட்டைக்கு காப்பீடும் நமக்கு உண்டு என்றாலும் உடனடியாக வங்கியை தொடர்புகொண்டு அட்டையை இயங்காநிலைக்கு கொண்டுவரவேண்டும். அதே சமயம் காவல்நிலையத்தில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கையையும் பெறவேண்டும், இவ்வாறு பெற்ற அறிக்கையை நீங்கள் உங்கள் வங்கிக்கு கடிதம் எழுதி உங்கள் வங்கிவிபரம், அட்டை விபரம் எங்கே எப்போது தொலைந்து போனது போன்ற விபரங்களை எல்லாம் வங்கிக்கு ஒரு புகராக அனுப்பினால் காப்பீடு உங்களுக்கு 100% வழங்கப்படும்.
இப்போதுள்ள வங்கி அட்டைகளில் பாதுகாப்பு எண்களை கொடுத்தால் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்யப்படும். நீங்கள் பழக்கதோசத்தில் மின்னலை வழியே இயங்கும் அட்டையை கொடுத்துவிட்டால் உங்களுக்கு தெரியாமலயே பணம் எடுக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே உங்களிடம் இந்த மின்னலை வழி இயங்கும் வங்கி அட்டை இருந்தால் மிக பாதுகாப்பாக பயன்படுத்துங்கள், அதே சமயம் அவ்வப்போது பயன்படுத்திய அறிக்கையை தொடர்ந்து கண்காணியுங்கள்
நமக்கு தொழில்நுட்பங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு எளிதான சேவையை வழங்குகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு பிரச்னைகளும் உள்ளன. இவைகளை மிகச்சரியாக கையாளவேண்டும்.
இந்தக்கட்டுரையில் வரும் கலைச்சொற்கள்
பொறி தொடாநிலை வங்கி அட்டை – CardLess Card
வானலை – Wifi
மின்னலை – RFID
அருகமைவு மின்னலை தகவல் தொடர்பு – NFC
கலைச்சொல் உதவி முனைவர். செல்வகுமார், முனைவர்.தெய்வசுந்தரம் அவர்கள்
– செல்வமுரளி