பூரி, ஒரிசா
பிரதமர் மோடியை ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரி தொகுதியின் வேட்பாளர் சம்பித் பாத்ரா சர்வாதிகாரி என குறிப்பிட்டுள்ளார்.
ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி தொகுதியில் உள்ள ஜகன்னாதர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இது இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகும். இந்த தொகுதியில் பாஜக சார்பில் சம்பித் பாத்ரா போட்டி இடுகிறார். இவருக்கு எதிராக போட்டியிடும் பிஜு ஜனதா தள வேட்பாளார் பினாகி மிஸ்ரா ஏற்கனவே இரு முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார்.
சம்பித் பாத்ராவை வேட்பாளராக அறிவித்ததற்கு பினாகி மிஸ்ரா, “பாஜக நரேந்திர மோடிக்கு சம்பித் பாத்ரா மூலம் நல்லாட்சியை அளிக்க உறுதி அளித்துள்ளது” என கிண்டல் செய்துள்ளார்.
சம்பித் பாத்ரா, “மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு பாஜக வேட்பாளரும் பிரதமர் மோடியின் சிறு உருவமாகும். நாங்கள் எங்கள் பெயரைக் கொண்டு போட்டியிடவில்லை. எங்களுடைய சுப்ரீம் லீடர் நரேந்திர மோடியின் பெயரைக் கொண்டு நாங்கள் போட்டி இடுகிறோம்” என பதிலளித்தார்.
பொதுவாக குடியரசு நாட்டின் தலைவரை சுப்ரீம் லீடர் என யாரும் அழைப்பதில்லை. சர்வாதிகார நாட்டு தலைவர் மட்டுமே சுப்ரீம் லீடர் என குறிப்பிடப்படுவார். நெட்டிசன்களிடையே சம்பித் பாத்ரா தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. சம்பித் பாத்ரா பேசியது உண்மைதான் என என் டி டி வி உறுதி செய்துள்ளது. அதை ஒட்டி பலரும் இந்த பதிவை பதிந்து வைரலாக்கி வருகின்றனர்.
WATCH | 'BJP promised Modi, but delivered Sambit Patra,' says Pinaki Mishra of BJD. Here's Sambit Patra's response
Full show here: https://t.co/U6yGf22VaL@OnReality_Check #LokSabhaElections2019 pic.twitter.com/1jROJFYym8
— NDTV (@ndtv) April 9, 2019
இது குறித்து அரசியல் ஆர்வலர்கள், “பாஜகவினர் எப்போதுமே விமர்சனத்தை தாங்கிக் கொள்ளாமல் உடனடியாக ஏதாவது பதில் அளிப்பார்கள். அதன் பொருளை பற்றி யோசிப்பது கிடையாது. இதனால் தான் சகிப்பு தன்மை அற்ற பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து செய்தியாளர்களை சந்திப்பது இல்லை.
அது மட்டுமின்றி பாஜகவின் மற்ற தலைவர்களும் அமைச்சர்களும் தங்கள் தலைமையைப் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பொறுமை இல்லாமல் இருக்கின்றனர். அதனால் தங்களை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை நாட்டுக்கு எதிரானவரகள் எனவும் தேசியத்துக்கு விரோதிகள் எனவும் கூறி விடுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளனர்.