ஸ்ரீநகர்: கடந்த மாதம் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட காஷ்மீர் மாநிலத்தின் 400 அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு, மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த மாதம் களநிலவரங்களை ஆய்வுசெய்த பின்னர், மொத்தம் 919 அரசியல்வாதிகள் மற்றும் பிரிவினைவாத இயக்க தலைவர்களின் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்படவே, பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டவர்களின் பட்டியலில், பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி