கொச்சி:

கேரள கன்னியாஸ்திரியை 2 ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பிஷப் ஃப்ராங்கோ முலக்கல் மீது நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர்.


கடந்த 2014-16 வரை கன்னியாஸ்திரியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஃப்ராங்கோ முலக்கல் மீது சக கன்னியாஸ்திரிகள் புகார் கொடுத்தனர்.

அதோடு தொடர்ந்து போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து, ரோமன் கத்தோலிக்க பிஷப் முலக்கல் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். உடனே ஜாமீனில் விடுதலையானார்.

பிஷப்புக்கு சர்ச்சின் மூத்த உறுப்பினர்கள் ஆதரவாக இருந்தனர். இந்நிலையில், பிஷப்புக்கு எதிராக 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் கேரள போலீஸார் தாக்கல் செய்தனர்.

பிஷப் மீது சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், இயற்கைக்கு மாறான பாலுறவு, அதிகார துஷ்பிரயோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனால், பிஷப் முலக்கலுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.