டில்லி
கடற்படை துணைத் தலைவரும் அந்தமான் நிக்கோபார் பிரிவு தலைவருமான பிமல் வர்மா பதவி உயர்வு கோரி தீர்ப்பாயத்தை அணுகி உள்ளார்.
கடற்படை தலைவர் அட்மிரல் சுனில் லம்பா வரும் மே மாதம் 30 ஆம் தேதியுடன் ஒய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக வைஸ் அட்மிரல் கரம்பீர் சிங் கடற்படை தலைவராக பொறுப்பேற்பார் என கடந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. இது மற்ற அதிகாரிகளுக்கு அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.
கரம்பிர் சிங் ஐ விட மற்றொரு கடற்படை துணை தலைவரும் அந்தமான் நிக்கோபார் பிரிவின் தலைவருமான வைஸ் அட்மிரல் பிமல் வர்மா பணியில் மூத்தவர் ஆவார். அடுத்ததாக அவர் கடற்படை தலைவராக பதவி உயர்வு பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த பதவி உயர்வு வரிசையில் வர்மா, அசோக் குமார், அஜித் குமார், அனில் குமார் சாவ்லா உள்ளிட்டோர் இருக்கின்றனர். எனவே இந்த விவகாரம் குறித்து வைஸ் அட்மிரல் பிமல் வர்மா ஆயுதப் பிரிவுப் படை தீர்ப்பாயத்தை அணுகி உள்ளார். தீர்ப்பாயம் நாளை விசாரணை நடத்த உள்ளது.
ராணுவத் தலைவர் பணிக்கு நியமனம் செய்யும் போது மூத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதே வெகுநாட்களாக வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த 2016 ஆ,ம் வருடம் ராணுவ தலைவர் நியமனம் செய்த போதும் மூத்த அதிகாரிக்க்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.