பெங்களூரு:

பிஎல் தொடரின் 17வது லீக் போட்டி இன்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி  கொல்கத்தா அணிக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி திறமையாக ஆடி ரன்களை குவித்தார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பெங்களூர் அணி மட்டையுடன் களத்தில் புகுந்தது, தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேல், விராட் கோலி ஆகியோர் இறங்கினர்.

ஆட்டத்தில் தொடக்கம் முதலே இருவரும் பந்துகளை அடித்து தூள் கிளப்ப தொடங்கியதால் ஆட்டம் விறுவிறுப் பாக நடைபெற்று வந்தது. பெங்களூர் அணி 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பார்திவ் படேல் அவுட்டானார. அவர்  25 ரன் எடுத்திருந்தார். அடுத்து  ஏபி டி வில்லியர்ஸ் கோலிக்கு கைகொடுத்தார். இருவரும் கொல்கத்தா பந்து வீச்சாளர்களின் பந்தை அதிரடியாக அடித்து  ரன்களை குவித்து வந்தனர். இருவரும் அரை சதம் கடந்து தூள் கிளப்பினர்.

இந்த நிலையில் விராட்கோலி ஆட்டம் இழந்தார். அவர்  49 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரியுடன் 84 ரன் எடுத்திருந் தார்.அவரை தொடர்ந்து அதிரடி காட்டிய டி வில்லியர்ஸ்  63 ரன்னில் வெளியேறினார். அவர் 31 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரி எடுத்திருந்தார்.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி  205 ரன்களை எடுத்துள்ளது. ஸ்டோனிஸ் 13 பந்தில் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

கொல்கத்தா அணியில் குல்தீப் யாதவ், நிதீஷ் ராணா, சுனில் நரின் ஆகியோர் தலா 1 விக்கெட்  வீழ்த்தினர்.

இதனையடுத்து கொல்கத்தா அணி 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது.