பெங்களூரு

ஸ்விக்கி நிறுவன ஊழியர் பாலியல் சீண்டல் செய்ததாக புகார் அளித்த பெண்ணுக்கு அந்நிறுவனம் ரூ.200 கூப்பன் அளித்துள்ளது.

உணவு வகைகளை விட்டுக்கே அளிக்கும் நிறுவனங்களின் சேவையை தற்போது ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களை குறித்து ஏராளமான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஒரு முறை இந்த உணவு கெட்டுப் பொய் இருந்ததாகவும் மற்றொரு முறை பூச்சி இருந்ததாகவும் புகார்கல் வந்தன. ஆனால் அதை எல்லாம் விட பெரிய புகார் கிளம்பி உள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் தனியே வசித்து வருகிறார். அவர் ஸ்விக்கி மூலம் உணவு வரவழைத்துள்ளார் அதை அவருக்கு அளித்த ஊழியர் அவரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டுள்ளார். தனக்கு பாலியல் சீண்டல் அளித்த ஊழியரிடம் இருந்து உணவு பொட்டலத்தை பிடுங்கிக் கொண்டு உள்ளே ஓடி அந்த பெண் கதவை சாத்தி உள்ளார்.

ஆனால் அவருக்கு அண்டஹ் உணவை உண்ணவும் பிடிக்கவில்லை. உடனடியாக அவர் இது குறித்து ஸ்விக்கிக்கு புகார் அளித்துள்ளார். அதற்கு வருத்தம் தெரிவித்த ஸ்விக்கி நிறுவனம் அவருக்கு நஷ்ட ஈடாக ரூ. 200 மதிப்புள்ள கூப்பன் ஒன்றை அளித்துள்ளது. இந்து அந்த பெண்ணுக்கு மிகவும் ஆத்திரத்தை அளித்துள்ளது. அவர் தனது இந்த அனுபவத்தை சமூக வலை தளங்களில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஸ்விக்கி நிறுவன மேலாளர், “எங்கள் நிறுவனத்தை பொறுத்தவரை வாடிக்கையாளர் பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும். இந்த தகவல் எங்களுக்கு வந்தபிறகு நாங்கள் அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டு எங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளோம். ஸ்விக்கி நிறுவனம் இனியும் அதுபோல தவறுகள் நடக்காது என உறுதி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.