டில்லி

ந்தியாவின் புகழ்பெற்ற விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தற்போது தனது சேவை விமானங்கலை 26 ஆக குறைத்துள்ள்து.

இந்தியாவின் தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தனது விமான ஓட்டிகளுக்கு ஆறு மாதம் விடுப்பில் செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. முன்பு இந்த நிறுவனத்தில் 1500 விமான ஓட்டிகள் இருந்தும் ஆட்கள் பற்றாக்குறை இருந்தது.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடந்த 1993 வருடம் நான்கு விமானங்கலுடன் தொட்ட்டங்கப்படது. அது சிறிது சிறிதாக வளர்ந்து மொத்தம் 119 விமானங்களை தனது சேவைக்கு பயன்படுத்தி வந்தது. இவற்றில் பெரும்பாலானவை வாடகை விமானங்களாகும். இந்த விமானங்களுக்கு அளிக்க வேண்டிய வாடகை பாக்கி மிகவும் அதிகரித்துள்ளதால் நிறுவனத்துக்கு வாடகைக்கு விமானம் கிடைககாத நிலை ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவைகளுக்கு 41 விமானங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தது. தற்போது அந்த எண்ணிக்கையை மேலும் 15 குறைத்து 26 ஆக மாற்றி உள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விமான சேவை நிறுவனம் இவ்வாறு குறைத்துள்ளது இதுவே முதல் முறையாகும்.