மும்பை:
இன்று மும்பை அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில், சிஎஸ்கே வீரர் சின்னதல ரெய்னா, முப்பை அணி வீரர்களின் பந்தை கேட்ச் பிடித்தால், 100 பந்துகள் கேட்ச் பிடித்த முதல் ஐபிஎல் வீரர் என்ற பெருமையை தட்டிச்செல்வார்.
சமீபத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், ஐபிஎல் போட்டியில் 5ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை பெற்றுள்ள சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா, தற்போது 100 கேட்ச் பிடித்த முதல் வீரர் என்ற மற்றோரு சாதனையை இன்று நிகழ்த்த ஆவலோடு காத்திருக்கிறார்.
அதுபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இன்றைய போட்டி யின்போது 1 விக்கெட் கைப்பற்றும் பட்சத்தில் வான்கடே மைதானத்தில் 50 விக்கெட் கைப்பற்றி பவுலர் என்ற பெருமைக்கு உரியவராவார்.
இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில், சிஎஸ்கே ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஒருவெற்றி, இரண்டு தோல்வியுடன் உள்ளது. இன்னும் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிடவில்லை.
இன்று இரவு 8 மணிக்கு 15வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 24 முறை மோதியுள்ளது. இன்றைய போட்டி சொந்த மண்ணில் நடப்பது மும்பை அணிக்கு பலமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் நடக்கும் 15வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றியை தொடர முயற்சி செய்யும். மும்பை அணி பலத்த எதிர்ப்பை காட்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில், பேட்டிங் வரிசை பலவீனமாக உள்ளது. பவுலிங்கில் பும்ரா கைகொடுக்கிறார். ஐபிஎல் அரங்கை பொறுத்தவரையில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிக முறை கோப்பை வென்ற அணிகள் என்பதால் இன்றைய போட்டிக்கான பரபரப்பு அதிகரித்துள்ளது.
மும்பையின் வான்கடே மைதானத்தில் கடந்த 2017 முதல் நடந்த ஐபிஎல்., போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 174 ஆக உள்ளது.
இன்றைய போட்டியில் சிஎஸ்கே வீரர் ரெய்னா மும்பை அணியின் பந்தை கேட்ச் பிடித்தால், ஐபிஎல் தொடரில் 100 கேட்ச் பிடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு உரியவராவார். இந்த சாதனை அவரது கிரிடத்தில் மேலும் ஒரு வைரமாக ஜொலிக்கும்.
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 99 கேட்ச்களை பிடித்துள்ள சின்னதல ரெய்னா, இன்று 100வது கேட்சை பிடித்து சாதனை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெய்னாவை தொடர்ந்து சிஎஸ்கே வீரர் பிராவோ 70 கேட்களை பிடித்துள்ள நிலையில், 5வது இடத்தில் உள்ளார். அவரும் விரைவில் சாதனையை எட்டுவார் என்று பிரார்த்திப்போம்.
தற்போதைய நிலையில், ரெய்னாவை தொடர்ந்து ரோஹித் சர்மா 79 கேட்ச் பிடித்து 2வது இடத்திலும், ஏபி டி வில்லியர்ஸ் 78 கேட்சுகளுடன் 3வது இடத்திலும், 75 கேட்ச் பிடித்து பொலார்டு 4வது இடத்திலும் 70 கேட்ச் பிடித்து பிராவோ 5வது இடத்திலும் உள்ளனர்.
அதுபோல கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் தோனி 84 கேட் பிடித்துள்ளார், அவருக்கு முன்னதாக 96 கேட்ச்களை பிடித்து தினேஷ் கார்த்திக் முன்னணியில் உள்ளார்.
இதுவரை மும்பைக்கு எதிரான சிஎஸ்கே களமிறங்கியுள்ள 24 போட்டிகளில், மும்பை இந்தியன்ஸ் 13 தடவை வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே அணி 11தடவை வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 8 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது.
மும்பையின் வான்கடே மைதானத்தில் கடந்த 2017 முதல் நடந்த ஐபிஎல்., போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 174 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.