சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லுங்கி நுகிடி அடிபட்டதால் விலகியதை தொடர்ந்து மற்றொரு வீரர் டேவிட் வில்லேவும் ஐபிஎல் 2019 போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

லுங்கி நிகிடி

யார்க் ஷயர் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் வீரர் டேவிட் வில்லே சிஎஸ்கே அணியினரால் ஐபிஎல் 2019 சீசனில் விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சீசனின் போது கேதார் ஜாதவுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒரு திறமையான ஆல்ரவுண்டர் என்பதால் இவரை சிஎஸ்கே தேர்வு செய்தது.

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை இரு போட்டிகள் நடந்துள்ளன. இந்நிலையில் டேவிட் வில்லே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் டேவிட் பில்லே தனது அறிக்கையில் “என்னால் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் என்னுடைய தனிப்பட்ட காரணங்களால், சிஎஸ்கே அணியில் பங்கேற்க இயலாது. என் மனைவிக்கு 2 ஆம் கழந்தை பிறந்துள்ளது. எனக்கு மனைவியையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது.

டேவிட் வில்லே

அதனால் இந்த ஆண்டு என்னால் யார்க் ஷயர் அணியில் மட்டுமே பங்கேற்று விளையாட முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், மற்ற லீக் ஆட்டங்களிலும், இடம் பெற முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எனக்கு மிகுந்த ஆதரவு அளித்தது, அவர்கள் என்னை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இந்த முடிவு நிச்சயம் எளிதானதல்ல, அதே நேர்த்தில், இதுல் சரியான முடிவு. நான் என்னுடைய குடும்பத்தை கவனிப்பதுதான் முதல் கடமை ஆகும். என்னை பொறுத்த வரையில் கிரிக்கெட் போட்டி 2-வது பட்சம்தான்.

தற்போது எனக்கிருக்கும் சிக்கல் முடிந்தபின், நான் கிரிக்கெட்டில் மீண்டும் கவனம் செலுத்துவேன் ” என கூறி உள்ளார். இது சிஎஸ்கே வுக்கு கடும் அதிர்ச்சியை உண்டக்கி உள்ளது. சி எஸ் கே அணியில் லுங்கி நிகிடி அடிபட்டதால் அவருக்கு பதிலாக நியுனிலாந்தின் வேகப் பந்து வீச்சாளர் ஸ்காட் குக்கிலிஜின் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே இதுவரை டேவிட் வில்லேவுக்கு மாற்றாக யாரையும் அறிவிக்கவில்லை.  அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ”வில்லே சொந்த காரணங்களுக்காக இம்முறை விளையாட்டில் இருந்து விலகி உள்ளார்.   இது தவிர்க்க முடியாதது.  அவருக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.  மேற்கொண்டும் அளிப்போம்” என தெரிவித்துள்ளார்.