டில்லி

லா நிறுவனம் நடமாடும் கழிப்பறைகளை அமைக்க உள்ளது.

நாடெங்கும், குறிப்பாக நகரங்களில் போதுமான கழிப்பறைகள் இல்லாத நிலை உள்ளது. அரசு தூய்மை இந்தியா என பல இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைத்த போதிலும் அவை உபயோகிக்கும்படி நீர் வசதியுடன் இல்லை. பல இடங்களில் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.

அதே நேரத்தில் ஷாப்பிங் மால் போன்ற பலரும் கூடும் இடங்களில் போதுமான கழிப்பறை இல்லை என கூறப்படுகிறது.  இந்த நிலையைப் போக்க புகழ்பெற்ற கால் டாக்சி நிறுவனமான ஓலா நடமாடும் கழிப்பறைகளை அமைக்க உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே கால் டாக்சி மட்டுமின்றி உணவு வழங்குதல் உள்ளிட்டவைகளையும் கவனித்து வருகிறது.

இது குறித்து ஓலா நிறுவனம் தனது டிவிட்டரில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் ”ஒலா கழிப்பறைகள் அறிமுகம் செய்கிறோம். பயணத்தில் இருக்கும் சமுதாயத்தினருகாக பயணம் செய்யும் இடங்கள்” என பதிந்துள்ளது. அந்த வீடியோவில் போன் செய்ததும் ஓலா கழிப்பறை வரும் என காட்டப்பட்டுள்ளது.