ஜெய்ப்பூர்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் நடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை, ரவிச்சந்திரன் அஸ்வின் அவுட் செய்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், ‘மேன்கேட்’ எனப்படும் ஒரு முறையில், ஜோஸ் பட்லரை அவுட்டாக்கினார். அதாவது, ரன்னர் முனையில் நிற்கும் பேட்ஸ்மேன், பந்து வீசப்படுவதற்கு முன்னதாகவே கோட்டை விட்டு வெளியே வந்தால், பெளலர் அவரை அவுட் செய்யும் முறைதான் அது. இத்தகைய அவுட் முறை, கிரிக்கெட்டில் பொதுவாக ஊக்குவிக்கப்படுவதில்லை.
இந்த அவுட்டால், ஜோஸ் பட்லர் கோபமாகி வெளியேறினார். அஸ்வினின் இந்த செயல், கிரிக்கெட் நாகரீகத்திற்கு எதிரானது என பலத்த விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ஆனால், தனது செயல் விதிமுறைகளுக்கு உட்பட்டதுதான் என அஸ்வின் நியாயப்படுத்தியுள்ளார்.
– மதுரை மாயாண்டி