ஐஜால்: மிசோரம் மாநிலத்திலுள்ள ஒரே நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகளின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடுகிறார் லாங்கிங்லோவா ஹமார்.
இதுகுறித்து கூறப்படுவதாவது; விளையாட்டுத்துறை பத்திரிகையாளராகவும், மிசோரம் கால்பந்து அசோசியேஷன் கெளரவ செயலாளராகவும் இருப்பவர் லாங்கிங்லோவா ஹமார்.
அம்மாநிலத்திலுள்ள ஒரேயொரு நாடாளுமன்ற தேர்தலில் இவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு, காங்கிரஸ் மற்றும் சோரம் மக்கள் இயக்கம்(ZPM) போன்ற கட்சிகள் ஆதரவளிக்கின்றன.
மேலும், அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள ஒரு சட்டசபை இடைத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி போட்டியிடுகிறது. எந்தக் கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட விருப்பமில்லாத காரணத்தினாலேயே, லாங்கிங்லோவா ஹமார், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்கின்றனர்.
இவரைத்தவிர, இன்னொரு சுயேட்சை வேட்பாளராக லால்த்லமுவானி என்பவரும் போட்டியில் இருப்பதாக, தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் நின்று வெற்றிபெறுவதைவிட, இவர்களின் பெயர்களை உச்சரிப்பதே மிகவும் கடினமானது என்று யாராவது சொன்னால் அதில் மிகையில்லை.
– மதுரை மாயாண்டி