லண்டன்: இந்தியாவால் தேடப்படும் வங்கி மோசடி குற்றவாளியும், தற்போது இங்கிலாந்தில் சிறை வைக்கப்பட்டுள்ளவருமான நீரவ் மோடிக்கு, விரைவில் பெயில் கிடைத்துவிடுமென வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் வழக்கறிஞர் பென் கெயித், வெளிநாடுகளால் தேடப்படும் குற்றவாளிகள் தொடர்புடைய வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். இந்திய அரசால் தேடப்படும் 3 குற்றவாளிகள் தற்போது இவரின் கிளையன்ட்டுகளாக உள்ளனர் என்பது தனி சுவாரஸ்யம்.
இவர் கூறுவதாவது, “நீரவ் மோடிக்கு சென்ற முறையே பெயில் கிடைக்காதது எனக்கு ஆச்சயர்மளிக்கிறது. அவர் திடீரென கைது செய்யப்பட்டதால், பெயில் வாங்குவதற்கான தயார் நிலையில் இல்லாமல் இருந்திருக்கலாம்.
மார்ச் 29ம் தேதி நீதிமன்றத்தினுடைய அடுத்த அமர்வின்போது, நீரவ் மோடியின் வழக்கறிஞர்கள், பெயில் கேட்டு மனு செய்கையில், பெயில் கிடைக்கலாம். ஏனெனில், அந்த மனுவை தயார்செய்ய வழக்கறிஞர்களுக்கும் அவகாசம் வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.
– மதுரை மாயாண்டி