ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பலாத்கார குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நிகல் சந்த் சவுகான் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதம் 21 ஆம் தேதி பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இம்முறை மூத்த தலைவரான அத்வானி உள்ளிட்டோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. . இது பல பாஜக தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது
இந்த பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் தொகுதி வேட்பாளராக நிகல் சந்த் சவுகான் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பஞ்சாயத்து ராஜ் துறையின் முன்னாள் இணை அமைச்சர் ஆவார். கடந்த 2011 ஆம் ஆண்டு நிகல் சந்த் சவுகான் மீது ஒரு இளம்பெண் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் அமைச்சரும் மற்றும் 16 பேரும் தன்னை 10 மாதங்களாக மயக்கத்தில் ஆழ்த்தி விட்டு பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் கூறி இருந்தார். ஒரு நாள் அவருக்கு மயக்க மருந்து சரிவர அளிக்கப்படாததால் அவர் தாம் பலாத்காரம் செய்யப்படுவதை உணர்ந்து இந்த புகாரை அளித்துள்ளதக கூறி உள்ளார்.
இதை ஒட்டி வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையை நிறுத்தக் கோரி நிகல் சந்த் சவுகான் மனு அளித்தார். ஜெய்ப்பூர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. பலாத்கார குற்றச்சாட்டை ஒட்டி அவர் கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட அவருக்கு மீண்டும் பாஜக தேர்தல் வாய்ப்பு அளித்துள்ளது.
இவர் பெயர் அறிவிக்கப்பட்ட விவகாரம் ராஜஸ்தான் மாநிலத்தில் மக்களிடையே மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.