ர்ணாகுளம்

த்திய அமைச்சர் அல்போன்ஸ் தனது தொகுதி என நினைத்து அடுத்த தொகுதிக்கு சென்று வாக்கு சேகரித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பிரதான கட்சிகளான ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் பலம் பொருந்திய வேட்பாளர்களை களத்தில் இரக்கி உள்ளனர். வாக்கு சேகரிப்பு மும்முரமாக நடைபெறுகிறது.

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக எர்ணாகுளம் தொகுதியின் வேட்பாளராக பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கருணாநந்தம்  அறிவிக்கப் பட்டுள்ளார். அவர் தொகுதி எங்கும் பிரசாரப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

எர்ணாகுளம் தொகுக்கு அடுத்ததாக உள்ளது சாலக்குடி தொகுதி ஆகும். மத்திய பாஜக அமைச்சர் அல்போன்ஸ் கருணாநந்தம் தனது தொகுதியின் எல்லையை கூட சரிவர அறியாததால் சாலக்குடி தொகுதிக்கு சென்று அங்கு தனக்கு வாக்கு சேகரிக்க தொடங்கி உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் மிகவும் நகைச்சுவையாக பேசப்படுகிறது.