மாண்டியா

ர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளிக்க உள்ளது.

 

மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான அம்பரீஷ் மனைவி பிரபல பன்மொழி நடிகை சுமலதா.   காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான அம்பரீஷின் மனைவி சுமலதா மாண்டியா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட மாநில காங்கிரஸ் தலைமையிடம் விருப்பம் தெரிவித்தார். இந்த தொகுதி கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே சுமலதாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மகன் நிகில் இந்த தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து சுமலதா சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாண்டியா தொகுதியில் ஒக்கலிகர் சமுதாய வாக்காளர்கள் பெருமளவில் உள்ளவர். அம்பரீஷ் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர். அதனால் சுமலதாவுக்கு அந்த சமுதாயத்தினர் வாக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக பாஜக மாண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ள்ளது.

மாண்டியா பகுதியில் குறிப்பாக ஒக்கலிக சமுதாயத்தினர் இடையே பாஜகவுக்கு செல்வாக்கு குறைவாக உள்ளது. அத்துடன் அங்கு காங்கிரஸ் ஆதரவாளர்கள் மஜதவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டதில் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை பாஜக பயன்படுத்திக் கொள்ள எண்ணுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலையில் ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த காங்கிரஸார் சுமலதாவுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர். அதனால் அவரை பாஜக வேட்பாளராக அறிவிக்க மாநில கட்சி மேலிடம் விரும்பவில்லை என கூறப்படுகிறது. காங்கிரசாரின் சுமலதா ஆதரவையும் மஜதவின் மீதான அதிருப்தியையும் இந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ள்தாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.