பாட்னா: சத்ருகன் சின்ஹா தற்போது உறுப்பினராக இருக்கும் பாட்னா சாஹிப் தொகுதியில், அவருக்கு பதிலாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிறுத்தப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பீகார் மாநிலத்தில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், எதிர்பார்க்கப்பட்டது போலவே, மோடிக்கு எதிராகப் போய்விட்ட சத்ருகன் சின்ஹாவிற்கு, பாட்னா சாஹிப் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆனால், அவருக்கு காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமென பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதீய ஜனதாவின் பல நடப்பு உறுப்பினர்களுக்கு, அதே தொகுதிகளில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு தொகுதிகள் மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய வேளாண் அமைச்சர ராதா மோகன் சிங், சம்பரான் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். ராம் க்ருபால் யாதவ், பாடலிபுத்திரா தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.
– மதுரை மாயாண்டி