லகிம்புர்

உத்திரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் யோகேஷ் வர்மா மீது இன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்புர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் யோகேஷ் வர்மா. இன்று பாஜக அலுவலகத்தில் ஹோலி கொண்டாட்டம் சிறப்பாக நடந்துள்ளது. அதில் யோகேஷ் வர்மா கலந்துக் கொண்டுள்ளார்.

இந்த ஹோலி கொண்டாட்டத்தின் போது யோகேஷ் சர்மா மீது பாஜக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது. அவருடைய காலில் குண்டு பாய்ந்துள்ளது உடனடியாக யோகேஷ் வர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அபாயம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிந்துள்ள உத்திரப் பிரதேச காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.