பாட்னா: வரும் நாடாளுமன்ற தேர்தலில், பீகார் மாநிலத்தில் பாரதீய ஜனதா போட்டியிடவுள்ள 17 தொகுதிகளில், பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் உயர்ஜாதி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது: நாடாளுமன்ற தேர்தலில், பீகாரிலுள்ள மொத்தம் 40 தொகுதிகளில் பாரதீய ஜனதாவும், ஐக்கிய ஜனதாதளமும் தலா 17 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பஸ்வான் கட்சி எஞ்சிய 6 இடங்களில் போட்டியிடுகிறது.

பாரதீய ஜனதா போட்டியிடவுள்ள 17 இடங்களில், 9 இடங்கள் உயர்ஜாதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன.

மாநிலத்திலுள்ள ஓபிசி வாக்குகளைக் கவரும் முயற்சியை கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் மேற்கொள்ளும் அதேவேளையில், பா.ஜ.க தரப்பில், உயர்ஜாதி வாக்குகளைக் கவரும் முயற்சி எடுக்கப்படுகிறது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

– மதுரை மாயாண்டி