சென்னை

ன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

முன்பு கோடை காலத்தில் மொட்டை மாடியில் படுத்து உறங்கியவர்களால் சிட்டுகுருவிகள் சத்தம் கேட்டு எழுந்ததை என்றும் மறக்க முடியாது. ஆனால் இன்றை ய நிலை மிகவும் மாறி உள்ளது. நாம் சிட்டுக்குருவிகளை நமது வீட்டின் அருகே கண்டு பல வருடங்கள் ஆகி உள்ளது. பலரும் ஒரு சிட்டுக்குருவியை கூட காண முடியாமல் ஏங்கி வருகின்றனர்.

இவ்வாறு சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதால் கடந்த 2010 ஆண்டு மார்ச் 20 முதல் நாம் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடி வருகிறோம். ஆனால் சிட்டுக்குருவிகள் அழிந்ததற்கு நாமும் ஒரு காரணம் என்பதை நாம் மறந்து விட்டோம். இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் சிட்டுக்குருவிகள் சிறிது சிறிதாக அழிவதற்கு முழுக் காரணம் மனிதர்களாகிய நாம் தான் என்பதே உண்மை ஆகும்.

பழைய கால வீடுகளின் கூரைகளிலும் மாடங்களிலும் சிட்டுக் குருவிகள் கூடு கட்டி வசித்து வந்தன. ஆனால் தற்போதைய வீடுகளில் சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டும் வசதி இல்லை. கடைகளில் சிதறும் தானியங்களை உண்டு வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகளுக்கு அடுத்தபடியாக உணவுத் தட்டுபாடு உண்டானது.

பாக்கெட்டுகளில் தானியங்கள் விற்கப்படுவதால் எவ்வித தானியமும் நகர்ப்புற சிட்டுக்குருவிகளுக்கு கிடைப்பதில்லை. அது மட்டுமின்றி கிராமப்புற வயல்களில் மட்டுமின்றி நகரங்களிலும்  பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. ஆகவே சிட்டுக்குருவிகளுக்கு முக்கிய உணவான பூச்சிகளும் கிடைக்க வழி இல்லாத நிலை ஏற்பட்டது.

மொபைல் டவர்களால் சிட்டுக் குருவிகள் பாதிக்கப்படுவதாக ஒரு கருத்து உலவி வருகிறது. சமீபத்திய ரஜினிகாந்த் படமான 2.0 படத்தின் கதை இந்த கருத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் பறவைகளுக்கு ஆதரவான வில்லைனை அழித்த கதாநாயகனால் சிட்டுக்குருவிக்கு வழி சொல்ல தெரியவில்லை.