வெலிங்டன்:

நியூசிலாந்த் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பத்துக்குப் பின்,  9 இந்தியர்களை காணவில்லை என நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்தில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஐதராபாத்தைச் சேர்ந்த 31 வயதான ஃபராஜ் அசான் என்ற சாஃப்ட்வேர் என்ஜினியர், நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குப் பின் காணவில்லை என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

அவரது மனைவி, 3 வயது மகள், 6 மாத ஆண் குழந்தையுடன் ஃபராஜ் அசான் நியூசிலாந்தில் வசித்துவந்தார். மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் தன் கணவர் ஃபராஜ் அசானை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது மனைவி கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதர் சஞ்சீவ் கோலி இச்சம்பவம் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் 9 இந்தியர்களை காணவில்லை என்று தெரிவித்துள்ளார்.