- நம் உலகமானது 79% நைட்ரஜனும் 20%, ஆக்சிஜன் எனும் பிராணவாயுவும், 3% கரியமிலவாயு வும், சிறிதளவு பிற வாயுக்களும் கொண்ட கிரகம். ஆனால் மனிதர்களின் அறிவியல் வளர்ச்சியால் நம்முடைய சுற்றுப்புறம் பெரும் சீரழிவை உருவாக்கிவருகிறது. அவ்வாறு உருவாகும் சீரழிவு பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, வானம், நிலம் ஆகிய அனைத்தையும் பாதிக்கின்றன.
சீனாவில் 2004 முதல் 2015 வரை 15 மாநிலங்களில் 88,000 பேர் மற்றும் சீன செயற்கைக்கோள் தரவுகளைக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் அந்நாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடிற்கும், நீரிழிவு நோய் பெருக்கத்திற்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் உலகிலயே அதிகமாக மக்கள் தொகை கொண்ட சீன நாட்டில் 2017ம் ஆண்டு எடுத்த ஆய்வின்படி அதன் 11% மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது
மாறிவரும் உணவு முறை மற்றும் வாழ்க்கை மற்றும் அதிகப்படியான காற்று மாற்றுப்பாட்டினால் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேர் முன்கூட்டியே இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
உலக அளவில் காற்று மாசுபாட்டிற்கு பல தரக்குறியீட்டு எண்கள் உள்ளன உள்ளன. அவற்றில் இந்தியாவில் PM10, PM2.5, NO2, SO2, CO, O3, NH3, மற்றும் Pb என்ற தரக்குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. PM2.5 எனும் தரக்கூறுயீட்டு முறையானது 2.5 மைக்ரோமீட்டரில் உள்ள வளிமண்டல துகளாகும் . PM2.5 ஆனது நமது தலைமுடியில் 3% தான் இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த PM2.5 தரக்குறியீட்டில் ஒரு கியூபிக் மீட்டரில் 10 மைக்ரோகிராம் சேர்ந்தாலே 16% பேருக்கு நீரிழிவு நோய் வரும் அபாயம் உள்ளதாக பீஜிங்கில் உள்ள புவாய் மருத்துவமனை மற்றும் எமோரி பல்கலைக்கழகம், அமெரிக்கா இணைய நடத்திய ஆய்வில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன
PM2.5 உள்ள காற்று மாசுபாடுகள் அதிகரிக்கும்போது அதில் உள்ள சல்பேட் மற்றும் கருப்பு கார்பன் ஆகியவையை மக்கள் சுவாசிக்கும்போது நுரையீரலையும், இதயத்தைக்கும் பாதிக்கும் தன்மை கொண்டது, இதனால் இதய நோய் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வரவும் வாய்ப்புகள் உள்ளது.
எதிர்காலத்தில் நான்கில் ஒரு மரணம் சுகாதார சீர்கேட்டால் நிகழும் என்று ஐக்கியநாடுகள் சபையும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட இப்போதிருந்தே மழைக்காடுகளை, மரங்களையும் நாம் பெருக்கிட வேண்டும்.
மரம் நடுவோம், ஆரோக்கியமான சூழலையும் பெறுவோம்
செல்வமுரளி