k4

யோசிக்க நினைத்து கட்டிக்கவா என்று msg பண்ண, உடனே

ம்… கட்டி புடிச்சுக்கோ

ஒரு நிமிடம் திகைக்கிறாள். சில நிமிடம் அமைதியாக இருக்க, அவனே அவள்

பெயரை மட்டும் msg பண்றான்.

மீண்டும் அமைதி, மறுபடியும் பேரை msg பண்ண, இவள்

ம்

ஸ்டெண்டப்

ம்

லூஸ் யூவர் ஹேண்ட்ஸ்

ம்

பக்கத்தில் வா

ம்

இன்னும் பக்கத்தில்

ம்

கட்டிபுடிசுக்கோ…

பதட்டம் மிகுதியாக இதய துடிப்பு அதிகரிக்க, இணைப்பை துண்டித்து விட்டு

ஓடிவிடுகிறாள்.

மாறுநாள் net ஆன் பண்ணவே பயமாக நாத்தனார் மகன் 11 வயது சிறுவன் fb

பார்களானு தொல்லை பண்ண அவனை அருகில் வைத்துகொண்டு fb ஆன்

பண்றாள். மாமி ஏதோ msg வந்திருக்கு என்று சொல்லி ஓபன் பண்ண அதில்

நாயகன் msg ரெண்டு

இரவு கடைசி msg

மடியில படுத்துகிறீயா…

காலையில் Good morning…

யாரு மாமி இது ?

ஒரு frd பா

Ok நான் Good morning போட்டுறேன்.

பதில் எதிர் பார்க்காமல் msg அனுப்புகிறான்.

கொஞ்ச நேரத்தில் நாயகனிடம் இருந்து call.

Hello…

என்ன நைட் பாதில ஓடிட்ட…

தப்பா இருந்தது.

என்ன தப்பு…

வேண்டா விடுங்க

Loosu கட்டி புடிகிறதுல என்ன தப்பு…, நம்ம என்ன நேர்லையா கட்டி புடிச்சோம் msg

தானே !

இருந்தாலும் தப்பு தான்.

Loosu loosu பாரீன்ல யார் வேண்ணுனாலும் யாரை வேண்ணுனாலும் கட்டி

புடிக்கலாம் தெரியுமா உனக்கு…

அது பாரீன் அவங்க கலாசாரம் வேற

சரி… நீ உன் பையனை கட்டிபுடிச்சு கொஞ்சுவீயா ? இல்லையா ?

ஹலோ அது அன்பு…

இதுவும் அன்புதான்

மடியில படுத்துகோன்னு சொன்னது…

loosu loosu நீ உங்க அம்மா மடியில படுத்தது இல்லையா !?எல்லாத்தையும் தப்பா

தான் பார்ப்பியா நீ ?

இல்ல நா…

பேசாத என்னை தப்பா யோசிச்சுடல

இல்ல அது வந்து…

என்ன வந்து, போய் ன்னு… போ போய் சாப்டு தூங்கு… நைட்டு தூங்குனீயா ?

இல்ல…

சரி போய் தூங்கு நல்லா.

call கட் பண்ண, ஒரு வேல அவன் நல்லவனா இருக்குமோ !? நம்ம தான் தப்பா

யோசிக்கிறோமோ !? இப்படி பல குழப்பங்கள் அவளுக்கு.

இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ள முயல்கிறாள்.

நீங்க யாரையாவது love பண்றீங்களா !? ( அவனுக்கு திருமணம் ஆகவில்லை)

ஆமாம்

ம்… பொண்ணு பேரென்ன

சுதா

Nice நேம் அழகா இருப்பாங்களோ !

looking good

எப்போ கல்யாணம்

தெரியல அதுக்கு கொஞ்சம் பிராபளம் இருக்கு நானும் செட்டில் ஆகணும் அப்பறம்

தான்.

ம்… சிக்கிரம் கல்யாணசாப்பாடு போடுங்க.

அவன் தப்பானவன் இல்ல நம்மதான் தப்பா யோசிச்சு இருக்கோம் ன்னு ஏதோ

அன்பால அப்படி பேசியிருக்காங்க, தன்னை தானே திட்டிகொள்கிறாள். எப்போதும்

தன்னோடு இருக்கும் தோழி இப்போதெல்லாம் லோப்டோப் ல இருப்பது அவள்

தோழி ஸ்ரீ க்கு சந்தேகம் வர விசாரிக்கிறாள். நடந்த எல்லா விசயங்களையும்

அவளிடம் சொல்ல வில்லங்கம் ஆரம்பம் ஆகிறது.