பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து, கருத்து கூறாமல் அமைதி காத்து வரும் ரஜினி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
‘பொள்ளாச்சியில் அப்பாவி பெண்கள் 200க்கும் மேற்பட்டோரை ஒரு கும்பல் பல ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வந்துள்ள விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழக மக்களை கொந்தளிக்க வைத்துள்ள இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை நடுரோட்டில் வைத்து கொல்ல வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கடுமையாக குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழக அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரையுலகை சேர்ந்தவர்கள், கட்சி தலைவர்கள் தங்களது மனக்குமுறலை கொட்டி வருகின்றனர்.
ஆனால், அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து உள்ள ரஜினிகாந்த், எப்போதும்போல, கட்சி தொடங்காமல் படத்தில் நடித்து சம்பாதிப்பதையே கடமையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தை உலுக்கி உள்ள பொள்ளாச்சி பாலியல் கொடுமை குறித்து, அனைத்து தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த கொடூர சம்பவம் கருத்து எதும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரஜினியின் இந்த மவுனம் மக்களுக்கு கடுப்பை ஏற்படுத்தினாலும்… எப்போதும்போல… ஹா ஹா ஹா என்று சிரித்து விட்டு, ஏதாவது ஒரு மொக்கை தகவலை தெரிவித்து விட்டு செல்வார்.. அவரின் பதில் நமக்கு எதற்கு என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மற்றொரு தரப்பினரோ, ரஜினியின் படம் வெளியாவதாக இருந்தால், அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பார் கட்சியினரை சந்திப்பார்.. தற்போதுதான் ஏதும் இல்லை… பிறகு ஏன் அவர் கருத்து கூறப்போகிறார் என்றும், அவரின் மவுனத்தை குற்றம் சாட்டியும் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.
ஏற்கனவே 7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு… 7 பேரா அது என்ன என்று கேள்வி எழுப்பி தனது அரசியல் ஞானத்தை வெளிப்படுத்திய ரஜினிக்கு, பொள்ளாச்சி பாலியம் சம்பவம் குறித்து என்ன தெரியப்போகிறது என்று கலாய்த்து வருகின்றனர்.