பொள்ளாச்சியில் 200 பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கொடுமை குறித்து சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்களுக்கு சட்டப்படி உச்சபட்ச தண்டனையை தாமதமின்றி வழங்கவேண்டும்.
பள்ளியிலேயே அடிப்படைக் கல்வியாக மனநல மருத்துவம் தொடர்பான கல்வியை கற்பிக்க வேண்டும். இவர்களைப் போன்ற மனபிறழ்வு உள்ளவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சட்டப்படி உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்பதை மனவலியுடன் கூறிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel