டோக்கியோ

லகின் மிகவும் வயதான பெண்மணியாக ஜப்பான் நாட்டை சேர்ந்த 116 வயதான கேன் தனாகா என்பவரை கின்னஸ் அறிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த கேன் தனாகா கடந்த 1903 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி பிறந்தார். இவர் பெற்றோருக்கு 8 குழந்தைகள் பிறந்தன. இவர் ஏழாமவர் ஆவார். இவரு ஜிடியோ தனாகா என்பவரை 1922 ஆம் வருடம் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தன. அத்துடன் ஒரு குழந்தையை தத்து எடுத்துள்ளனர்.

தற்போது 116 வயதாகும் இவர் உலகின் மிகவும் வயதான பெண்மணி ஆவார். இதற்கு முன்பு மற்றொரு ஜப்பான் பெண்மணியான சியோ மிகாயோ உலகின் மிகவும் வயதானவராக இருந்தார். அவர் சென்ற வருடம் ஜுலை மாதம் தனது 117 ஆம் வயதில் மரணம் அடைந்தார். அத்துடன் அதற்கு முன்பு உலகின் வயதான பெண்மணியாக இருந்தவரும் ஜப்பானை சேர்ந்தவர் ஆவார்.

இவ்வாறு ஜப்பானியப் பெண்கள் அதிக நாட்கள் வாழ்வதற்கு அவர்களுடைய கடின உடல் உழைப்பே காரணம் என சக ஜப்பானியர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அந்தப் பெண்கள் உடல் பருமன் இன்றி இருந்ததால் நீண்ட நாட்கள் வாழ்ந்து வருவதாகவும் தற்போதைய இளம் பெண்கள் உடல் பருமனை குறித்து அக்கறை இல்லாமல் உள்ளதாகவும் ஜப்பான் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கேன் தனாகாவை தற்போது உலகின் மிகவும் வயதான பெண்மணி என அறிவித்து கின்னஸ் கவுரவித்துள்ளது. அத்துடன் உலகின் மிகவும் வயதான ஆண் குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் விரைவில் அது குறித்துஅறிவிக்கப்படும் எனவும் கின்னஸ் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு உலகில் மிகவும் வயதானவராக இருந்த ஆணும் ஜப்பானை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.